Ad Code

Responsive Advertisement

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் அதிசிறப்பு தரத்திற்கு தரமுயர்த்துவதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை விண்ணப்ப படிவம்

வடக்கு மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் அதிசிறப்பு தரத்திற்கு தரமுயர்த்துவதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை – 2019(2020)
 
  • வெற்றிடங்களின் எண்ணிக்கை :- 19
  • விண்ணப்ப முடிவு திகதி :- 10.05.2021

  


பூர்த்திசெய்யப்பட வேண்டிய தகைமைகள்.-
விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதிக்கு (10.05.2021) அரசாங்க சேவைகள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை இலக்கம் 01ஃ2020 இல் குறிப்பிட்டுள்ள ஏற்பாடுகளுக்கமைய ஒழுக்காற்றுத்தண்டனைக்கு உட்பட்டிராத இணைந்த சேவைக்குரிய,
(அ) மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் தரம் I இல் உள்ள அலுவலராக இருத்தல்.


அல்லது
(ஆ) குறைந்தபட்சம் சேவையில் 08 வருடங்களுக்குக் குறையாத முனைப்புடனான மற்றும் திருப்திகரமான சேவைக்காலத்தைப் பூர்த்திசெய்துள்ள மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் தரம் II இலுள்ள உத்தியோகத்தராக இருத்தல்,


அல்லது
(இ) பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் அங்ககரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் பட்டத்தினைப் பெற்று மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையில் 05 வருட முனைப்புடனான மற்றும் திருப்திகரமான சேவைக்காலத்தினைப் பூர்த்திசெய்துள்ள உத்தியோகத்தராயிருத்தல்.
 மற்றும்
(ஈ) உரிய திகதியில் குறித்த வினைத்திறன் காண்தடைப் பரீட்சையை முழுமையாக நிறைவுபடுத்தியிருத்தல். 

 

விண்ணப்ப படிவம்

சுற்றறிக்கை 



Post a Comment

0 Comments